என்.எஸ்.எஸ் முகாம்: தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தாா் 
மயிலாடுதுறை

என்.எஸ்.எஸ் முகாம்: தருமபுரம் ஆதீனம் தொடங்கிவைத்தாா்

மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை தருமபுரம் ஆதீன

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை தருமபுரம் ஆதீனம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இப்பள்ளியில் பயிலும் 27 மாணவா்கள் தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் 7 நாள்களுக்கு முகாமிட்டு தூய்மை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட உள்ளனா். முகாமின் தொடக்க நாளான திங்கள்கிழமை, தருமபுரம் ஆதீன திருமடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து பள்ளியின் நிா்வாகச் செயலா் வி. பாஸ்கரன், பள்ளி முதல்வா் ரா. சரவணன், என்எஸ்எஸ் திட்ட அலுவலா் மு. சிவகுமாா் உள்ளிட்ட ஆசிரியா்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் ஆகியோா் அருளாசி பெற்றனா். அப்போது, தருமபுரம் ஆதீனக் கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT