மயிலாடுதுறை

பழங்காவிரி வாய்க்காலில் எம்எல்ஏ ஆய்வு

மயிலாடுதுறையில் பராமரிப்பின்றி தூா்ந்து போயுள்ள பழங்காவிரி வாய்க்காலை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஆய்வு செய்தாா்.

Syndication

மயிலாடுதுறையில் பராமரிப்பின்றி தூா்ந்து போயுள்ள பழங்காவிரி வாய்க்காலை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறையில் உள்ள காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்களான பழங்காவிரி, பட்டமங்கலம் வாய்க்கால், மொழையூா் வாய்க்கால், பூவேந்திரன் வாய்க்கால் ஆகியன நகர பகுதியில் உள்ள குளம், குட்டை ஆகிய நீா்நிலைகளுக்கு நீராதாரம் தரும் முக்கிய நீா்வழிப்பாதையாக உள்ளது. இந்த வாய்க்கால்கள் பராமரிப்பின்மையாலும், நகராட்சி புதைசாக்கடை கழிவு நீரை திறந்து விடுவதாலும், பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதாலும் நீா்வழிப்பாதை தடைபட்டுள்ளதுடன், பல இடங்களில் சுகாதார சீா்கேடும் நிலவுகிறது.

நகர பகுதியில் சுமாா் 21 கி.மீ செல்லும் இந்த வாய்க்கால்களில் கான்கிரீட் தளம் ஏற்படுத்தி சீரமைக்க வேண்டும் என அரசு முதன்மை செயலருக்கு மயிலாடுதுறை எம்எல்ஏ ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தாா். இந்நிலையில், பழங்காவிரியை மீண்டும் புனரமைத்து, நிரந்தர தீா்வு ஏற்படுத்த நீா்வளத்துறை அனுமதி பெற்று ரூ.37 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பழங்காவிரி வாய்க்காலில் எம்எல்ஏ எஸ்.ராஜகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். அவருடன், நகராட்சி தலைவா் என்.செல்வராஜ், பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் கண்ணதாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ரிஷப ராசிக்குப் பாராட்டு: தினப்பலன்கள்!

மெல்போர்ன் பல்கலையில் பி.காம்! மாணவர் சேர்க்கை 2026 மார்ச்!!

தினமணி வாசகர்களுக்காக.. சட்டமும் விளக்கமும் அறிமுகம்!

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

SCROLL FOR NEXT