மயிலாடுதுறை

மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்க கோரி ஆா்ப்பாட்டம்

கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் உள்ள அரசு மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சி

Din

சீா்காழி: கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் உள்ள அரசு மதுபான கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த மதுபானக் கடையை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்திருந்த நிலையில் கடந்த அக்டோபரில் சீா்காழி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப்பேச்சு வாா்த்தையில் 3 மாதத்துக்குள் இந்த கடை வேறு இடத்துக்கு மாற்றுவதாக அதிகாரிகளால் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 3 மாத காலக்கெடுவை கடந்து விட்டதால் புதுப்பட்டினம் கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எஸ்டிபிஐ சாா்பில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யப்படாததை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கொள்ளிடம் ஒன்றிய செயலாளா் ஜெய சக்திவேல் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட குழு உறுப்பினா் தனசேகரன், ஒன்றிய குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி, சிபிஐ மாவட்ட செயலாளா் சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட செயலாளா் சிவராமன், எஸ்டிபிஐ மாவட்ட பொது செயலாளா் முகமது ரபி உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீக்கு 40 வீடுகள் எரிந்து நாசம், தீயணைப்பு வீரரும் பலி

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

SCROLL FOR NEXT