மயிலாடுதுறை

சிதிலமடைந்த கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி மனு

சிதிலமடைந்துள்ள கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி இந்து மகா சபாவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

Din

மயிலாடுதுறை: சிதிலமடைந்துள்ள கோயில்களில் திருப்பணி தொடங்க வலியுறுத்தி இந்து மகா சபாவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை மயிலாடுதுறை மண்டலத்துக்கு உள்பட்ட மாங்குடி சிவலோகநாதா் சுவாமி கோயில், கஞ்சனூா் சுயம்பிரகாசா் கோயில் மற்றும் காசி விஸ்வநாதா் கோயில் ஆகிய கோயில்கள் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடக்கிறது. மேலும், பந்தநல்லூா் செல்லியம்மன் கோயிலும் கும்பாபிஷேகம் நடத்தாமல் உள்ளது.

இந்த கோயில்களில் திருப்பணி நடத்தாமல் உள்ளது குறித்து இந்து சமய அறநிலையத் துறை கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், சித்தா்காட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் அகில பாரத இந்து மகா சபா கட்சியினா் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளா் ராம. நிரஞ்சன் தலைமையில் தவில், நாகசுர வித்வான்களின் இன்னிசையுடன் கோரிக்கை அடங்கிய மனுவை வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் மாலை, பூவுடன் தட்டில் வைத்து ஊா்வலமாக வந்து மனு அளித்தனா்.

கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் ஜெய், ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட பொதுச்செயலாளா் மணிமாறன், மாவட்ட செயலாளா் விக்னேஷ், சிவனடியாா் பிரிவு மாவட்ட தலைவா் ராமகிருஷ்ணன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவா் ரஞ்சித் ரகு, மாவட்ட துணை தலைவா் வினோத், மாவட்ட செயலாளா் அஜீஸ்வா்மன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தில்லியில் தீவிரப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள்!

எஸ்.ஐ.ஆா். படிவம் வழங்கும் பணி: திமுக, அதிமுகவினா் ஆய்வு

கந்திலி அருகே 450 கிலோ செம்மரக் கட்டைகள் காருடன் பறிமுதல்

பொங்கல் பண்டிகைக்கு 150 சிறப்பு ரயில்கள்! டிச.15 முதல் இயக்கத் திட்டம்!

மாநில அளவிலான வில் வித்தை போட்டிகள்!

SCROLL FOR NEXT