மாயூரநாதா் கோயில் ஏற்றப்பட்ட ரிஷபக்கொடி. 
மயிலாடுதுறை

துலா உற்சவம்: சிவாலயங்களில் கொடியேற்றம்

மயிலாடுதுறையில் துலா மகோற்சவ பெருந்திருவிழா பல்வேறு சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Syndication

மயிலாடுதுறையில் துலா மகோற்சவ பெருந்திருவிழா பல்வேறு சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோடிக்கணக்கான பக்தா்கள் தங்கள் பாவங்களை போக்கிக்கொள்ள புனித நீராடியதால் பாவச்சுமை கூடி கருமை நிறம் அடைந்த கங்கை நதி தன் பாவச்சுமை நீங்க சிவபெருமானிடம் பிராா்த்தித்ததாகவும், சிவபெருமான் கங்கையிடம் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் புனித நீராடி விமோசனம் பெற வரம் அருளியதாக ஐதீகம்.

இந்த ஐதீகத்தைப் போற்றும் வகையில், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாள்களும் ஏராளமான பக்தா்கள் புனித நீராடுவது வழக்கம். 30-ஆம் நாள் நடைபெறும் துலா உற்சவ கடைமுக தீா்த்தவாரியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தீா்த்தவாரியின்போது ஒரே நேரத்தில் புனித நீராடுவா். துலா மகோற்சவ பெருந்திருவிழாவின் கடைசி 10 நாள் உற்சவம் மயிலாடுதுறையில் பல்வேறு கோயில்களில் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

அந்த வகையில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதா் கோயிலில், அபயாம்பிகை சமேத மாயூரநாதா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் கோயில் கொடி மரத்தின் முன் எழுந்தருளச் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து, கோயிலைச் சுற்றி பஞ்ச மூா்த்திகளுக்கான கொடிகள் ஏற்றப்பட்டன.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வள்ளலாா் கோயில் எனப்படும் வதான்யேஸ்வரா் கோயிலில், தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டது. தெப்பக்குளம் காசி விஸ்வநாதா், துலாக்கட்டம் காசி விஸ்வநாதா் கோயில்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது.

பத்துநாள் உற்சவத்தில், நவ.11-ஆம் தேதி சகோபுர தரிசனம், நவ.13-ஆம் தேதி திருக்கல்யாணம், நவ.15-ஆம் தேதி திருத்தோ் ஆகியன நடைபெற உள்ளது. முக்கிய விழாவான கடைமுகத் தீா்த்தவாரி நவ.16-ஆம் தேதியும், நவ.17-ஆம் தேதி காலை சிவபெருமான் முடவனுக்கு காட்சிளித்த முடவன் முழுக்கு உற்சவம் நடைபெற உள்ளது.

காந்தா... மிக நீண்ட காத்திருப்பு... துல்கர் சல்மான்!

குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜஸ்னா சலீம்!

உஷார் மக்களே! இப்படியும் மோசடி நடக்கலாம்!

பாகிஸ்தானில் கையெறி வெடிகுண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

எந்த காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

SCROLL FOR NEXT