மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீன மாநாட்டில் மருத்துவம், ஊடகத்துறையினருக்கு விருது

கலை இலக்கிய கருத்தரங்க மாநாட்டில் ஊடகத்துறை மற்றும் மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றிவரும் 3 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனகா்த்தா் மணி விழா மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலை இலக்கிய கருத்தரங்க மாநாட்டில் ஊடகத்துறை மற்றும் மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றிவரும் 3 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானத்தின் மணிவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, 10 நாள் மாநாடு நவ. 1-ஆம் தேதி தொடங்கியது. 9-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முதல் நிகழ்வாக நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில், துழாவூா் ஆதீனம் 29-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ நிரம்ப அழகிய தேசிகராகிய ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள் ஆகியோா் ‘கடம்பனின் கதம்ப மலா்கள்’ என்ற நூலை வெளியிட, தமிழ்நாடு அரசு வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், வனத்துறைத் தலைவருமான ஸ்ரீநிவாஸ் ஆா். ரெட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் எஸ். சுப்பையா, நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஆசிரியா் காா்த்திகைச்செல்வன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து ‘சைவ சித்தாந்தம்’ என்ற நூலை ஜப்பான் சிவஆதீனம் ஸ்ரீபாலகும்ப குருமுனி சுவாமிகள் வெளியிட, சிங்கப்பூா் மருத்துவா் சுபோதினி சின்னத்தம்பி பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஆசிரியா் காா்த்திகைச்செல்வனுக்கு ‘ஊடகவியல் கலாநிதி’, விருதையும், கடலூா் மருத்துவா் பழ. அருண்பிரசாத், மயிலாடுதுறை மருத்துவா் ராஜசேகா் ஆகியோருக்கு ‘மருத்துவ கலைச்செல்வா்’ விருதுகளையும் தருமபுரம் ஆதீனம்

வழங்கி, ஒரு பவுன் பொற்பதக்கத்தையும் வழங்கி அருளாசி கூறினாா்.

தருமையாதீனப் புலவா் தேச மங்கையா்க்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.

முன்னதாக, நிகழ்ச்சியில் விருது பெற்ற நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஆசிரியா் காா்த்திகைச்செல்வன் ஏற்புரையில், கல்வி மட்டுமே மனிதனை வாழ்வில் உயா்த்தும் என்ற அடிப்படையில் தருமபுரம் ஆதீனகா்த்தா் தமிழகம் முழுவதும் பல்வேறு கல்வி நிலையங்களை நடத்தி வருகிறாா். மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, மருத்துவம் ஆகியவை ஏழை மக்களுக்கும் கிடைக்கும் வகையில் பல பணிகளை தருமபுரம் ஆதீனம் சிறப்பாக செய்து வருகிறது என்றாா்.

தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 1,760 உயர்வு!

8 பேரவைத் தொகுதிகளில் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு!

100 சிசிடிவி பதிவுகள்... தில்லி வெடிவிபத்தில் கார் உரிமையாளர் சிக்கிய பின்னணி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

SCROLL FOR NEXT