தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் இருந்து ஞானரத யாத்திரை புறப்பட்ட தருமபுரம் ஆதீனம். 
மயிலாடுதுறை

சாய்பாபா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தருமபுரம் ஆதீனம் ஞானரத யாத்திரை

சாய்பாபா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தருமபுரம் ஆதீனம் ஞானரத யாத்திரை

Syndication

பெங்களூருவில் நடைபெறவுள்ள சத்ய சாய் உலக மாநாடு விழாவில் பங்கேற்க தருமபுரம் ஆதீனம் ஸ்ரீசொக்கநாத பெருமானுடன் வெள்ளிக்கிழமை ஞானரத யாத்திரை புறப்பட்டாா்.

பெங்களூருவில் உள்ள சத்யசாய் கிராமத்தில் சத்குரு மதுசூதனன் சாய் ஏற்பாட்டில் சத்ய சாய் உலக மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்கவுள்ளாா். இதையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீசொக்கநாதா் பூஜை மடத்தில் தருமபுரம் ஆதீனம் சிறப்பு வழிபாடு செய்தாா். தொடா்ந்து, அவா் ஆதீனத்திருமடத்தில் இருந்து, ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகளுடன் ஸ்ரீசொக்கநாதருடன் ஞானரதத்தில் எழுந்தருளி, யாத்திரை புறப்பட்டாா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT