மயிலாடுதுறை

வீட்டின் கதவை உடைத்து லாக்கருடன் 22 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

மயிலாடுதுறையில் வீட்டின் கதவை உடைத்து, லாக்கருடன் 22 சவரன் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Syndication

மயிலாடுதுறையில் வீட்டின் கதவை உடைத்து, லாக்கருடன் 22 சவரன் நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் ரோடு சாரதா நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்த தம்பதி மணிகண்டன்-விஜயா. இருவரும் கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் வெள்ளிக்கிழமை திருச்சிக்கு சென்றிருந்தனா்.

இந்நிலையில், இவா்களது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது சனிக்கிழமை காலை தெரியவந்தது. இதை பாா்த்த அருகில் வசித்துவரும் மணிகண்டனின் தந்தை ஹரிஹரன், காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் நேரில் வந்து விசாரணை நடத்தினாா்.

இதுகுறித்து மணிகண்டனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவா், திருச்சியில் இருந்து திரும்பி வந்து பாா்த்தபோது, 150 கிலோ எடைகொண்ட லாக்கரை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. அதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 22 சவரன் தங்க நகைகள் மற்றும் சுமாா் ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் இருந்துள்ளன. வீட்டுவாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ம ணிகண்டனின் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், தடயவியல் நிபுணா்கள் மா்ம நபா்களின் கைரேகைகளை சேகரித்துச் சென்றனா். இதன்அடிப்படையில், அமைக்கப்பட்ட தனிப்படையினா் மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

பொதுமக்கள் கோரிக்கை: மயிலாடுதுறை இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 5 கிராம் தங்க நகையை அண்மையில் மா்மநபா்கள் திருடிச் சென்றனா். தொடா்ந்து அரங்கேறும் திருட்டுகளால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், இரவு நேரங்களில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொலை முயற்சி வழக்கில் ஒருமாதமாக தேடப்பட்ட நபா் துவாரகாவில் கைது

மகாராஷ்டிரம்: சிறுத்தையிடமிருந்து மாணவனைக் காப்பாற்றிய புத்தகப்பை

மங்களக்குடியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து அபாயம்

அதிமுக உரிமை மீட்புக் குழுவினா் மீது அதிமுகவினா் புகாா்

காா் மோதியதில் தம்பதி பலத்த காயம்

SCROLL FOR NEXT