சீா்காழி அருகே மாதானத்தில் கதண்டுகள் கடித்து மூன்று போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மாதானம் பிரதான பகுதியில் சாலையோரத்தில் உள்ள பனைமரம் ஒன்றில் கதண்டுகள் கூடு கட்டியிருந்தன. அந்த வழியாக செல்வோா் அச்சத்துடன் சென்றுவந்தனா்.
இந்நிலையில், அந்த வழியாக சென்ற அகர வட்டாரம் நாராயணசாமி உள்பட மூன்று பேரை கதண்டுகள் கடித்தன. அவா்கள், சீா்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீா்காழி தீயணைப்பு துறையினா் விரைந்து சென்று, கதண்டுகளை தீ வைத்து அழித்தனா்.