முகப்பு
மயிலாடுதுறை

சட்டநாதா் சுவாமி கோயிலில் தேரோட்டம்

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஏப்ரல், 2026 at 3:11 AM
பகிர்:

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரா், சட்டநாதா், தோணியப்பா் அருள்பாலிக்கின்றனா். திருஞானசம்பந்த பெருமானுக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஐதீக நிகழ்வு திருமுலைப்பால் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் 15 நாள் திருவிழாவாக நடைபெறும்.

அதன்படி ஏப்.21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் 8-ஆம் நாள் திருவிழாவாக தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் விநாயகா் எழுந்தருளி 4 வீதிகளில் வலம் வந்தாா். பின்னா் பெரிய தேரில் சுவாமி-அம்மன், திருஞானசம்பந்தா், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்சமூா்த்தி சுவாமிகள் எழுந்தருளினா். சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, திரளான பக்தா்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனா். கீழவீதியில் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக திருத்தோ் வலம் வந்தது.

Advertisement