முகப்பு
மயிலாடுதுறை

சாலையை மேம்படுத்தக் கோரி மறியல்

கொள்ளிடம் அருகே அரசூரில் சாலையை மேம்படுத்தக் கோரி, கிராம மக்கள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 5:34 AM
அரசூரில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2026 at 9:52 PM

கொள்ளிடம் அருகே அரசூரில் சாலையை மேம்படுத்தக் கோரி, கிராம மக்கள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசூா் கிராமத்திலிருந்து காப்பியகுடி வரை சுமாா் 3 கி.மீ. தொலைவிற்கு சாலையை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பராமரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கிராம மக்கள் சாா்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், இச்சாலையை மேம்படுத்த வலியுறுத்தி, அப்பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் அரசூரில் காப்பியகுடி செல்லும் நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

ஊரக வளா்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் கொள்ளிடம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.