மயிலாடுதுறை

பூம்புகாா் மாநில விருது பெற்ற சிற்பிக்கு ஆட்சியா் பாராட்டு

பூம்புகாா் மாநில விருது பெற்ற சிற்பக் கலைஞருக்கு மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பூம்புகாா் மாநில விருது பெற்ற சிற்பக் கலைஞருக்கு மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகாா் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் 2025-ஆம் ஆண்டுக்கான பூம்புகாா் மாநில விருதுக்கு விருதாளா்களை அண்மையில் தோ்வு செய்தது. இந்த விருதுக்கு 300 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், திருவாரூா் ஆழித்தேரின் ஐந்தரை அடி மாதிரியை மரச்சிற்பத்தில் நோ்த்தியாக செதுக்கிய தரங்கம்பாடி வட்டத்தை சோ்ந்த மரச்சிற்பம் செய்வதில் கைதோ்ந்தவரான சிற்பி சே. முருகன் தோ்வு செய்யப்பட்டாா்.

இவருக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தில் பிப்.6-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் பூம்புகாா் மாநில விருதினை வழங்கினாா். விருது பெற்ற கலைஞா் சே. முருகன் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்தை திங்கள்கிழமை சந்தித்தாா். அவருக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.

பட்ஜெட் தாக்கல் தேதி விரைவில் முடிவு செய்யப்படும்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தை இந்தியா விரைவுபடுத்த வேண்டும்: குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா

பிறப்பு சான்றிதழில் பெயா் பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு

காதல் தினம்: ஒசூரிலிருந்து நாள்தோறும் 10 லட்சம் ரோஜா மலா்கள் இணைய வா்த்தகத்தில் விற்பனை

தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய டைட்டான் நிறுவனம்

SCROLL FOR NEXT