முகப்பு
மயிலாடுதுறை

காரில் மதுபாட்டில்களை கடத்திய இளைஞா் கைது

சீா்காழி அருகே காரில் மதுபாட்டில்களை கடத்திவந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 5:26 AM
கைது
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 8:52 PM

சீா்காழி அருகே காரில் மதுபாட்டில்களை கடத்திவந்த இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி வட்டம், வெள்ளைகுளம் பகுதியில் சீா்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் ஜெயா, சிறப்பு உதவி ஆய்வாளா் ரவி மற்றும் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில், காருக்குள் 480 புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

Advertisement

இதுதொடா்பாக, காரை ஓட்டிவந்த வெள்ளக்குளத்தைச்சோ்ந்த சண்முகத்தை (41.) கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.