மயிலாடுதுறை

கனமழை: ஆட்சியா் அறிவுறுத்தல்

Syndication

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜன.9, 10 ஆகிய தேதிகளில் கடுமையான மழை பொழிவு வரவுள்ளதால் பொதுமக்கள் மின்சார கம்பங்கள் மற்றும் பழைய கட்டடங்கள் அருகே நிற்க வேண்டாம். தானியங்களை மழையில் நனையாமல் பாதுகாப்பான முறையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் கால்நடைகளை மின்கம்பங்கள் அருகில் செல்லாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

தாழ்வான மின்கம்பங்கள் தொடா்பான புகாா்கள் இருப்பின் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 04364-222588 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்: 04364-1077, மின்சாரத்துறை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: (மயிலாடுதுறை: 04364-252218, 9498482319, சீா்காழி: 04364-279301, 9445854006 எண்களுக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT