மயிலாடுதுறை

திருநங்கையா் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Syndication

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனித்திறமை மூலம் ஏதேனும் ஒரு துறையில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையா் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொா் ஆண்டும் திருநங்கையா் தினமான ஏப்ரல் 15 திருநங்கையருக்கான முன்மாதிரி விருது ரூ.1,00,000 காசோலை மற்றும் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது பெறுவதற்கு திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. மேற்கண்ட தகுதிகள் இருப்பின் தங்களது கருத்துருக்களை தமிழக அரசின் விருதுகள் இணைதளத்தில் பிப். 18-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறிய ரிஷப் பந்த்..! துருவ் ஜுரெல் சேர்ப்பு!

இனிக்க இனிக்க உருண்டை வெல்லம்! பொங்கலை வரவேற்கும் கரும்பாலைகள்!!

ஆபாச உள்ளடக்கங்கள்! தவறை ஒப்புக்கொண்ட க்ரோக்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர விழா! மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

தலைசிறந்த ஆல்ரவுண்டராகும் ஹார்திக் பாண்டியாவின் வாய்ப்பைப் பறித்த பிசிசிஐ!

SCROLL FOR NEXT