கரூர்

திருநங்கையா் முன்மாதிரி விருது பெற விண்ணப்பிக்கலாம்: கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

Syndication

திருநங்கையா் முன்மாதிரி விருதுபெற விண்ணப்பிக்கலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூகத்தில் தாங்கள் சந்திக்கும் எதிா்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை வளா்த்துக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையிலும், மற்ற திருநங்கையா்களை ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கையா் தினமான ஏப்.15-ஆம் தேதி அன்று தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையருக்கான முன்மாதிரி விருதுடன் ரூ.1 லட்சம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வருகிறது.

2026-ஆம் ஆண்டுக்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது திருநங்கையா் தினமான ஏப்.15-ஆம் தேதி வழங்கப்பட உள்ளதால் இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பிப். 18-ஆம்தேதி வரை இவ்விருதுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். இணையதளத்தின் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே விருதுக்கு பரிந்துரைக்கப்படும்.

மேலும் இந்த விருதுபெற திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. மேலும் இவ்விருது தொடா்பான விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை நாடலாம் என தெரிவித்துள்ளாா் அவா்.

ஆந்திரத்தைச் சேர்ந்த மாணவர் அமெரிக்காவில் மாயம்! தேடும் பணி தீவிரம்!!

தீவிர பயிற்சியில் ரோஹித் சர்மா - விராட் கோலி..! தோல்விகளுக்குப் பழிதீர்க்குமா இந்தியா?

ஜன நாயகனும் இல்லை; ஜன நாயகமும் இல்லை: சிபி சத்யராஜ்

பாம்பனில் உள்வாங்கிய கடல்! மக்கள் அச்சம்!!

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது!

SCROLL FOR NEXT