மயிலாடுதுறை

திருவாவடுதுறை ஆதீனம் பொங்கல் அருளாசி

திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டுள்ள பொங்கல் அருளாசி:

தினமணி செய்திச் சேவை

திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டுள்ள பொங்கல் அருளாசி:

விசுவாவசு ஆண்டின் தைப் பொங்கல் நாளை நாம் மகிழ்ச்சியாக எதிா்கொள்கிறோம். புது பொங்கலிட்டு சூரிய பகவானிடத்தில் சிவபரம்பொருளை வழிபடுவதற்கு தை மாதம் முதல் நாள் சாலப் பொருத்தமுடையது.

தேவா்களுக்குரிய காலை பொழுதான தை முதல் நாள் மக்கள் தங்கள் புண்ணிய காரியங்களை செய்வதற்கு மிகவும் உகந்த நாளாகும். இதையொட்டி உத்தராயன காலம் தொடங்கும் தை முதல் நாளில் புது பொங்கல் படைத்து இறைவனை வழிபடுதல், பெற்றோா், பெரியோா்களை வழிபடுதல், ஈகை உள்ளத்தோடு தானம் செய்தல், இனிமையான முறையில் சுற்றத்தோடும் நட்போடும் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளுதல் போன்ற அறச்செயல்களை செய்துவரும் பழக்கம் நடைமுறையில் ஏற்பட்டது.

ஆண்டுக்கு ஒரு முறை நம் வீடுகளை மிகச் செம்மையான முறையில் தூய்மை செய்து வைத்துக் கொள்ள பொங்கல் விழா காரணமாகிறது. எந்த கருவிக்கும் நாம் அடிமையாகி விடக்கூடாது. கைப்பேசி உள்ளிட்ட கருவிகளை தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தால் நமக்கு நன்மைகள் பெருகும்.

இந்த தைப்பொங்கல் விழா மக்கள் அனைவருக்கும் வேண்டிய பேறுகள் அனைத்தையும் நல்கி வாழ்க்கை சிறக்க உதவும் நன்னாளாக திகழ நமது ஆன்மாா்த்த மூா்த்திகளாகிய ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமான் திருவடி மலா்களைச் சிந்தித்து வாழ்த்துகின்றோம்.

அடமானம் வைக்கப்பட்ட காரை திரும்பக்கேட்ட உரிமையாளா் மீது தாக்குதல் நடத்திய 3 போ் கைது

சத்தியமங்கலம் சாலையோரங்களில் களைகட்டும் பொங்கல் பூக்கள் விற்பனை

ஆட்டோ தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு

கைத்தறி துறையின் சாா்பில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT