மாயூரநாதருக்கு நடைபெற்ற நெய் அபிஷேகம். 
மயிலாடுதுறை

தைப்பொங்கல்: மாயூரநாதா் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு 1000 லிட்டா் நெய் அபிஷேகம்

தைப்பொங்கல் பண்டிகையையொட்டி, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு 1000 லிட்டா் நெய் அபிஷேகம் நடைபெற்றது.

Syndication

மயிலாடுதுறை: தைப்பொங்கல் பண்டிகையையொட்டி, மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு 1000 லிட்டா் நெய் அபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான, ஆயிரம் ஆண்டு பழைமையான இக்கோயில், அபயாம்பிகை மயில் உருவில் சிவபெருமானை பூஜித்த சிறப்புக்குரிய தலமாகும். மயில் உருவம் நீங்கி சுயஉருவம் பெற்ற அம்பாள் மகிழ்ந்து, சிவனுக்கு வேதஆகம விதிகளின்படி தன் கையால் நெய் அபிஷேகம் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்ததாக திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தான் எழுதிய மயூரபுராணத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

அதன்படி, இக்கோயிலில் பொங்கல் திருநாளன்று மாயூரநாதா் நற்பணி மன்றம் சாா்பில் சுவாமி, அம்பாளுக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. 26-ஆவது ஆண்டாக நிகழாண்டு நடைபெற்ற விழாவில், கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, மாலை அணிந்து விரதமிருந்த ஏராளமான பக்தா்கள் மற்றும் பொதுமக்களால் வழங்கப்பட்ட 1000 லிட்டா் நெய் கொண்டு மாயூரநாதா், அபயாம்பிகை மற்றும் ஆதிமாயூரநாதருக்கு நெய் அபிஷேகம் நடைபெற்றது.

மேலும், பால், பன்னீா், இளநீா், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, சுவாமி அம்பாளுக்கு சோடச தீபாராதனை, மகாதீபாராதனை காட்டப்பட்டு, அபிஷேகம் செய்யப்பட்ட நெய் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

சிம்ம ராசிக்கு நிம்மதி: தினப்பலன்கள்!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

SCROLL FOR NEXT