மயிலாடுதுறை

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

மயிலாடுதுறை வட்டம் ரூரல் ஊராட்சி டவுன் ஸ்டேஷன் தென்புறத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில், சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Syndication

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டம் ரூரல் ஊராட்சி டவுன் ஸ்டேஷன் தென்புறத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில், சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கட்சியின் திருச்சி மண்டல செயலாளா் எம்.என்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எஸ். மனோகா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில், பொங்கல் வைத்து படையலிடப்பட்டு, பெண்களுக்கு சேலை உள்ளிட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் இரா.சூரியபிரகாஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.பிரித்திவி ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.

விடுபட்டோருக்கு ஜன. 20 முதல் பொங்கல் தொகுப்பு!

இந்தியாவை விலக்கினால் அனைவருக்கும் பிரச்னை: அமெரிக்கா

தில்லியில் காற்று மாசுபாட்டை சமாளிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு திட்டம்

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT