புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பேரூராட்சி தலைவா் சரளா கோபால் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ஜோஸ்லின் ராஜ் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி குழுக்களைச் சாா்ந்த பெண்கள், பள்ளி மாணவா்- மாணவிகள் பங்கேற்று 10 பானைகளில் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கினா்.
இதில், வாா்டு உறுப்பினா்கள் கிருஷ்ணன், லாசா், ஜெபசிங் அல்போன்சாள், அனிதா, பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.