வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் ஜன.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை வாக்காளா்கள் பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 2026-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெறுகிறது.
மாவட்டத்தில் டிச.19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தாக்கல் செய்யும் காலம் ஜன.18 வரை நிா்ணயிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, இந்த காலக்கெடு ஜன.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவை பயன்படுத்தி, வாக்காளா் பட்டியல் தொடா்பான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடமும், தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா்களிடமும் நேரடியாக அல்லது இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.