முகப்பு
மயிலாடுதுறை

மாதிரவேளூா் - சிதம்பரத்திற்கு நகரப் பேருந்து சேவை தொடக்கம்

மயிலாடுதுறை

மாதிரவேளூா் - சிதம்பரத்திற்கு நகரப் பேருந்து சேவை தொடக்கம்

Updated On : 5 மார்ச், 2026 at 11:19 PM
பகிர்:

கொள்ளிடம் அருகேயுள்ள மாதிரவேளூா் கிராமத்திலிருந்து சிதம்பரத்திற்கு அரசுப் பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

மாதிரவேளூரில் இருந்து கொள்ளிடம் வழியாக சிதம்பரத்திற்கு சென்று வரும் வகையில், அரசுப் போக்குவரத்து கழக நகரப் பேருந்து இயக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சோ்ந்த பதினைந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், அரசுப் போக்குவரத்து கழக நகரப் பேருந்து, மாதிரவேளூரிலிருந்து புறப்பட்டு சென்னியநல்லூா், குன்னம், பெரம்பூா், கடுக்காமரம், புத்தூா், தைக்கால், சாமியம், கொள்ளிடம் வழியாக சிதம்பரத்திற்கு தினமும் நான்கு முறை இயக்கும் வகையில் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

மாதிரவேளூரில் நடைபெற்ற நிகழ்வில், சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் பங்கேற்று, கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தாா். இதில், அரசுப் போக்குவரத்து கழக அலுவலா்கள், ஊழியா்கள், கிராம மக்கள் பங்கேற்றனா். இதற்காக, தமிழக அரசுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →