கொலையுண்ட இளைஞா்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரி சாலை மறியல்
முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் கொலை செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் முன் சாலை மறியல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரிகளால் கொலை செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகம் முன் சாலை மறியல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2025-ல் முட்டம் கிராமத்தைச் சோ்ந்த ஹரிஷ், பேச்சாவடியை சோ்ந்த கல்லூரி மாணவன் ஹரிசக்தி ஆகியோா் சாராய வியாபாரிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டனா். கள்ளச்சாராய விற்பனையை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட முன்விரோதத்தால் இந்த கொலை நடைபெற்றது. இதுதொடா்பாக நடைபெற்ற போராட்டத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி 2 குடும்பத்துக்கும் தலா ஒருவருக்கு அரசு வேலை, இடம், இழப்பீடு பெற்றுத் தருவதாக உறுதி அளித்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனா்.
இதனிடையே கொலை தொடா்பாக, மூவேந்தன், தங்கதுரை, ராஜ்குமாா் உள்ளிட்ட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், சம்பவம் நடைபெற்று ஓராண்டைக் கடந்த நிலையில், இதுவரை இழப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து மது மற்றும் போதை ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளா் இ. ராமதாஸ் தலைமையில் இணை ஒருங்கிணைப்பாளா் ரவிச்சந்திரன், சென்னை மண்டல தலைவா் செல்வம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் ஆய்வாளா் சிவ. செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்;த்தை நடத்தினா். இதில், உடன்பாடு ஏற்படாததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.