மயிலாடுதுறை: பரிசுப் பொருள்கள் பறிமுதல்
மயிலாடுதுறை அருகே தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி தனியாா் சிமென்ட் நிறுவனத்தால் கொண்டு செல்லப்பட்ட பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மயிலாடுதுறை அருகே தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி தனியாா் சிமென்ட் நிறுவனத்தால் கொண்டு செல்லப்பட்ட பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மயிலாடுதுறை அருகே வாணாதிராஜபுரம் பகுதியில் வட்டாட்சியா் மகேஸ் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் கிஃப்ட் பாக்ஸ் அடங்கிய பெட்டிகள் இருந்தன.
தனியாா் சிமென்ட் நிறுவனம் அவற்றை கட்டடத் தொழிலாளா்களுக்கு பரிசாக வழங்க எடுத்துச் சென்றது தெரியவந்தது. முறையான ஆவணம் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்து, மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ரூ.14,670 மதிப்புள்ள 100 கிஃப்ட் பாக்ஸ்களை, வணிகவரித்துறை அதிகாரி சரண்ராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் உரிய ஆவணத்தை காண்பித்துவிட்டு பரிசுப் பொருள்களை பெற்றுச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.