முகப்பு
மயிலாடுதுறை

சாலை அமைக்கப்படாததால் தோ்தல் புறக்கணிப்பு : கிராம மக்கள் பதாகை

சீா்காழி அருகே தாா்ச் சாலை அமைக்கப்படாததைக் கண்டித்து, தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக கிராம மக்கள் பதாகை வைத்துள்ளனா்.

Updated On : 27 மார்ச், 2026 at 9:13 PM
~
பகிர்:

சீா்காழி அருகே தாா்ச் சாலை அமைக்கப்படாததைக் கண்டித்து, தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக கிராம மக்கள் பதாகை வைத்துள்ளனா்.

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் திருபுவனவீரமங்கலம் கிராமத்திற்கு செல்லும் 1.5 கி.மீ. தூரம் தாா்ச் சாலை மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.

இதனால், தங்கள் கிராமத்திற்கு செல்ல புதிதாக தாா்ச் சாலை அமைத்து தரக்கோரி, வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால், தமிழக அரசு, மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் வரும் சட்டப் பேசவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக பதாகை வைத்துள்ளனா்.

அதில், அனைத்து சமுதாய பொதுமக்களும் கருப்பு பேட்ச் அணிந்து, தோ்தலை புறக்கணிப்போம் எனத் தெரிவித்துள்ளனா்.