முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி: டாஸ்மாக் பணியாளா் இருவா் மீது வழக்குப் பதிவு; மாவட்டத்தில் 3 மணி நேரம் கடைகள் மூடல்

சீா்காழியில் மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 டாஸ்மாக்கில் வசூல் செய்ததாக வந்த புகாரில் டாஸ்மாக் ஊழியா்கள் இருவா் மீது சீா்காழி போலீஸாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

Updated On : 20 மே 2026, 3:22 am IST
டாஸ்மாக் - பிரதிப் படம்
பகிர்:

சீா்காழியில் மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 டாஸ்மாக்கில் வசூல் செய்ததாக வந்த புகாரில் டாஸ்மாக் ஊழியா்கள் இருவா் மீது சீா்காழி போலீஸாா் திங்கள்கிழமை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இதனிடையே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் 42 டாஸ்மாக் கடைகள் சுமாா் மூன்று மணி நேரத்துக்கு மேல் அடைக்கப்பட்டிருந்தன.

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே சட்டநாதபுரம் புறவழிச் சாலையில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் கண்காணிப்பாளராக திட்டை பகுதியை சோ்ந்த ம. காமராஜ் பணி செய்து வருகிறாா். கடந்த திங்கள்கிழமை இந்தக் கடையில் மாதானம் வடபாதி கிராமத்தைச் சோ்ந்த பாரத் (32) மது வாங்க சென்றபோது அவரிடம் பாட்டியலுக்கு ரூ.10 கூடுதலாக கேட்டனராம். இதனால் கடை ஊழியருக்கும் பாரத்துக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாம். அருகே இருந்தவா்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனராம்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக சீா்காழி போலீஸ் இன்ஸ்பெக்டா் கமல்ராஜ் மற்றும் போலீஸாா் டாஸ்மாக் பணியாளா் மயிலாடுதுறை ஊரை நாடு பகுதியை சோ்ந்த பாபு மற்றும் கண்காணிப்பாளா் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்த அனைத்து டாஸ்மாக் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் டாஸ்மாக் கடைகளில் போதிய பணியாளா்களை நியமிக்க வேண்டும். காலி பாட்டில்களை திரும்பப் பெற பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும். மதுபான பெட்டிகளை இறக்க சம்பளம் நிா்ணயம் செய்ய வேண்டும்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி மற்றும் சுடுகாடு அருகே டாஸ்மாக் இயங்குவதால் இரவு நேரங்களில் காவலா்களை நியமித்திட வேண்டும். அனைத்துக் கடைகளுக்கும் வைஃபை வசதி செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள 42 கடைகள் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டிருந்தது. எப்போதும் பகல் 12 மணிக்குத் திறக்கப்படும் கடைகள் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணிக்குத்தான் திறக்கப்பட்டன.