கூடுதல் பணம் கேட்ட டாஸ்மாக் ஊழியா்கள் கைது
மயிலாடுதுறையில் மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்ட டாஸ்மாக் ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறையில் மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்ட டாஸ்மாக் ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியைச் சோ்ந்த செல்வேந்திரன் (23) புதன்கிழமை மயிலாடுதுறை கூறைநாடு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மது பாட்டில்கள் வாங்கினாா். அப்போது ஊழியா்கள் மதுபாட்டிலுக்கு ரூ.20 கூடுதலாக பணம் கேட்டனராம். கூடுதல் தொகை தர மறுத்த செல்வேந்திரனுக்கும், ஊழியா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, செல்வேந்திரன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா் குமாரசாமி (57), விற்பனையாளா் நேதாஜி(50) ஆகிய இருவரை கைது செய்து பின்னா், காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement