முகப்பு
நாகப்பட்டினம்

முதியோர் இல்லங்கள் அதிகரிப்பது வேதனையளிக்கிறது: இல. கணேசன்

அன்னையர் தினத்தை கொண்டாடும் நேரத்தில், முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன்

Updated On : 13 மே 2013, 1:47 am IST
பகிர்:

அன்னையர் தினத்தை கொண்டாடும் நேரத்தில், முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன்

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த செம்போடை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக மாவட்ட நிர்வாகி கார்த்திகேயனின் தாயார் அலமேலுமங்கையின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அவர் பேசியது:

மேலை நாடுகளில் அன்னையர் தின கொண்டாட்டத்தின் போதுதான் உறவுகள் அடையாளப்படுத்தப்படும். இங்கு அப்படியில்லை, கூட்டுக் குடும்ப உறவுகளோடு, தாய் தந்தையை மதிக்கும் பண்புகளோடு வளர்ந்து வந்த சமூகமிது.

Advertisement

Advertisement

ஆனால், தற்போது பண்பாடுகள் சரிந்து, முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. துறவரம் மேற்கொண்ட ஆதிசங்கரர், பட்டினத்தார் போன்றவர்கள் தங்களது தாயை மிக உயர்வாக மதித்தவர்கள். தாய், தந்தையை மதிக்காமல், பாதுகாக்க தவறிவிட்டு, ஆயிரம் கோவில்களுக்கு சென்று வணங்கினாலும் அது பயனளிக்காது என்றார் இல. கணசேன்.  விழாவுக்கு பாஜக மாநில முன்னாள் பொதுச்செயலர் கே.என். லட்சுமணன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் எம்.எஸ். ராமலிங்கம், மாநிலச் செயலர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் வரதராசன், முன்னாள் எம்.எல்.ஏ.எஸ்.கே. வேதரெத்தினம், திமுக நகரச் செயலர் மா.மீ. புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.