நாகப்பட்டினம்

போக்குவரத்து நெருக்கடி: திறக்கப்படாத புதிய பாலத்தில் வாகனங்கள் இயக்கம்

DIN

சீர்காழி சூரக்காடு பகுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க, புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள பாலத்தை வாகன ஓட்டிகளே திறந்து போக்குவரத்துக்கு பயன்படுத்தினர்.
சீர்காழி- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சூரக்காடு பகுதியில் உப்பனாற்றின் குறுக்கே பழைய பாலத்தின் அருகில் ரூ. 8.85 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தும் இந்த பாலம் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படவில்லை.
இந்நிலையில், சனிக்கிழமை அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் பழையபாலத்தின் வழியாக ஒன்றன் பின் ஒன்றாகத்தான் செல்லமுடியும். இதனால், இருபுறமும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள்அணிவகுத்து நின்றன. தொடர்ந்து, இரவிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதற்கிடையில், வெளியூர்களிலிருந்து வந்த சில வாகன ஓட்டிகள் புதிய பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி விட்டு, அதன் வழியே வாகனங்களை இயக்கினர்.இதைத்தொடர்ந்து, மற்ற வாகனங்களும் புதிய பாலத்தில் இயக்கப்பட்டன. இதையறிந்த சீர்காழி போலீஸார் விரைந்துசென்று, புதிய பாலத்தில் தடுப்புகளை அமைத்தனர். அப்போது, பழைய பாலத்தில் சென்ற லாரி பழுதாகி, நின்றதால் அவ்வழியாக வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு, புதிய பாலத்தில் மீண்டும் போக்குவரத்து நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்!

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

SCROLL FOR NEXT