நாகப்பட்டினம்

கல்லூரியை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தல்

DIN

அரசு தொழில்நுட்பக் கல்லூரியைச் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
புத்தூரில் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரி தங்கும் விடுதியில் பல மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியுள்ளனர். கடந்த சில நாள்களில் பெய்த மழைநீர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியைச் சூழ்ந்தது. மழை விட்டும் இதுவரை வடியவில்லை. 2 அடி ஆழத்துக்கு தேங்கியுள்ள மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் உள்ளதால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT