நாகப்பட்டினம்

தருமபுரம் ஆதீனம் கல்லூரி மாணவர்கள் சார்பில் கொடிநாள் நிதி

DIN

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி சார்பில் கொடிநாள் நிதியாக ரூ.10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் வியாழக்கிழமை 
வழங்கினார்.
முன்னாள் ராணுவ வீரர்களின் நலனுக்காக கொடி நாள் நிதிக்காக , தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவர்கள் உண்டியல் மூலம் ரூ.10 ஆயிரம் வசூல் செய்தனர். இந்நிலையில், தருமையாதீனத்துக்கு வியாழக்கிழமை வந்த நாகை மாவட்ட  ஆட்சியர்  சீ. சுரேஷ்குமாரிடம், இந்நிதியை  தருமையாதீனம் 26-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக பரமாசார்ய சுவாமிகள்
வழங்கினார். 
அப்போது, தருமபுரம் ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மசிலாமணி தேசிக  ஞானசம்பந்த சுவாமிகள், கல்லூரியின் செயலாளர் ஆர். சிவபுண்ணியம், முதல்வர் எஸ். சுவாமிநாதன், முன்னாள் முதல்வர் எம். திருநாவுகரசு, கல்லூரி  தேசிய மாணவர் படை அலுவலர் துரை. கார்த்திகேயன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி கணிப் பொறித் துறைத் தலைவர் செந்தில்குமார், இயற்பியல் துறைத் தலைவர் செந்தில்குமரன், லியோ சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT