வங்கி வாடிக்கையாளர் கூட்டம்
திருவெண்காடு அருகேயுள்ள மங்கைமடம் சிட்டி யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் கூட்டம் மற்றும் வங்கி முதலாமாண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவெண்காடு அருகேயுள்ள மங்கைமடம் சிட்டி யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் கூட்டம் மற்றும் வங்கி முதலாமாண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
வங்கி மேலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில், வங்கி அலுவலர் குருநாதன், வங்கி காசாளர் கனகராஜ், சீர்காழி கிளை மேலாளர் ஜெய்கணேஷ், மங்கைமடம் வர்த்தகர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், கரும்பு விவசாயிகள் தலைவர் யோகநாதன், வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த அய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.