நாகப்பட்டினம்

செம்மங்குடியில் 5 கோயில்கள் குடமுழுக்கு

DIN

சீர்காழி அருகேயுள்ள செம்மங்குடியில் செல்வவிநாயகர், மாரியம்மன், அய்யனார், வலம்புரி விநாயகர், காளியம்மன் ஆகிய 5 கோயில்களில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செம்மங்குடி கிராமத்தில் அருகருகே அமைந்துள்ள 5 கோயில்களுக்கும் திருப்பணிகள் நடந்து முடிந்தது. இதையொட்டி, நான்கு கால யாக சாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை ஒவ்வொரு கோயில் முன்பும் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க மேள தாளங்களுடன் ஊர்வலமாகச் சென்று கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு 5 கோயில்களுக்கும்  குடமுழுக்கு நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT