நாகப்பட்டினம்

நாகை கோ-ஆப்டெக்ஸில் புதிய விற்பனை திட்டம் தொடக்கம்

DIN

நாகை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற புதிய விற்பனை திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற விற்பனை திட்டம், கோ-ஆப்டெக்ஸில் ஜூலை 17-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நாகை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு ரூ. 7 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, சேலம் பட்டுப் புடவைகள், மென்பட்டுப் புடவைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், குர்த்தீஸ், காட்டன் சட்டைகள், குல்ட் மெத்தை விரிப்புகள் உள்பட பல்வேறு துணி ரகங்கள் புதிய வரவாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. நாகை, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில்,  இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற புதிய திட்டம் மூலமான விற்பனையை நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் ஷேகர் சஞ்சய் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் அ. கோபால், நாகை விற்பனை நிலைய மேலாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT