நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் தரிசு நிலப் பரப்பில் தீ

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தரிசாக உள்ள விளைநிலப் பரப்பில் திடீரென பரவிய தீயால், சவுக்கு மரங்கள், வேலிகள் புதன்கிழமை எரிந்து நாசமாகின.
வேதாரண்யத்தில் பல மாதங்களாக மழையில்லாத நிலை நீடித்து வருகிறது. கடும் வெயிலின் காரணமாக தரிசாக உள்ள விளைநிலங்களில் வளர்ந்த புல், பூண்டு, தாவரங்கள் கருகி காணப்படுகின்றன. இந்நிலையில், வேதாரண்யம் ரயில் நிலையம் அருகேயுள்ள தனியாருக்குச் சொந்தமான தரிசு நிலப் பரப்பில்  புதன்கிழமை ஏற்பட்ட  தீ, அருகில் இருந்த சவுக்கு மரங்கள், தாழை, முள்வேலிகளில் பரவியது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் அங்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீ பரவியதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT