நாகப்பட்டினம்

கோடியக்கரை சரணாலயத்தில்  விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நிறைவு

DIN

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் 3 நாள்கள் தொடர்ந்து நடைபெற்ற வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் அரிய வகை இன வெளிமான்கள்,புள்ளிமான்கள், மட்டக் குதிரைகள், காட்டுப்பன்றிகள்,நரி, குரங்கு உள்ளிட்ட காட்டு விலங்குகள் ஏராளமான எண்ணிக்கையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இவற்றின் நிகழாண்டுக்கான (2016-17) கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை காலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட கல்லூரி  மாணவர்கள், தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன. கணக்கெடுப்பு தகவல் சில நாள்களில் வெளியிடப்படும் என வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT