இடிந்து விழுந்த பள்ளி கட்டடச் சுவர்
திருமருகல் அருகே பெரிய கண்ணமங்கலத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி கட்டடத்தின் ஒரு பகுதி புதன்கிழமை இடிந்து விழுந்தது.
திருமருகல் அருகே பெரிய கண்ணமங்கலத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி கட்டடத்தின் ஒரு பகுதி புதன்கிழமை இடிந்து விழுந்தது.
பெரிய கண்ணமங்கலம் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் பழுதடைந்த ஓட்டு கட்டடம் உள்ளது. 2006-07 ஆம் ஆண்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு அதில் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஓட்டு கட்டடம் மிகவும் பழுதடைந்திருந்ததால், அங்கு பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதன்கிழமை காலை ஓட்டு கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தகவலறிந்த ஆதிதிராவிடர் நல அலுவலர் பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தமிழ்செல்வன், செபஸ்தியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.