நாகப்பட்டினம்

பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

DIN

உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில், நாகை டாடா நகர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு வியாழக்கிழமையையும் டெங்கு விழிப்புணர்வு நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில், நாகை உணவு பாதுகாப்புப் பிரிவு சார்பில் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் பி.கலா தலைமை வகித்தார். நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் பங்கேற்று, டெங்கு கொசுக்கள் உற்பத்தி மற்றும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆர். மஹாராஜன், அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்ட அலுவலக புள்ளியியல் அலுவலர் ப. அந்துவன் சேரல் ஆகியோர் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு குறித்துப் பேசினர்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT