நாகப்பட்டினம்

வெளிமாநில மது புட்டிகள் பறிமுதல்: தலைமைக் காவலர் கைது

DIN

நாகை அருகே காரில் மது கடத்தியதாக தலைமைக் காவலர் ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது: காரைக்காலில் இருந்து வாஞ்சூர் வழியாக மது புட்டிகள் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வாஞ்சூர் சோதனைச் சாவடியில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால் பகுதியிலிருந்து வேகமாக வந்த காரை மடக்கி விசாரிக்கையில் அதிலிருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.
இதையடுத்து நடைபெற்ற சோதனையில் அதில் 250 மில்லி வகை 17 புட்டிகள், 650 மில்லி வகை 2 புட்டிகள், 180 மில்லி வகை 48 என 199 மது புட்டிகள் இருந்துள்ளன. மேலும், காரிலிருந்தவர் தஞ்சையில் தலைமைக் காவலராக பணிபுரியும் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்வேலன் (45) என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து நாகூர் போலீஸார் வழக்குப் பதிந்து செந்தில்வேலனை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT