நாகப்பட்டினம்

அனுமதியின்றி மின் இணைப்பு: ரூ. 13 லட்சம் நஷ்டம் ஏற்படுத்தியதாகப் புகார்

DIN

நாகப்பட்டினத்தில் அனுமதியின்றி மின் இணைப்பை எடுத்து, ரூ. 13,93,620 அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாகை மின்சாரத்துறையில் இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளராக இருப்பவர் அப்துல் வஹாப். இவர் நாகை நகர போலீஸாரிடம் வியாழக்கிழமை புகார் ஒன்றை அளித்தார். அதில், நாகை, நேதாஜி சாலையில் சிராஜூதீன் என்பவருக்கு சொந்தமான பழரசக் கடை உள்ளது. இந்தக் கடையை சோதனை செய்தபோது, அனுமதியின்றி மின் இணைப்பு எடுத்திருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் ரூ. 13,93,620 அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்துல் வஹாப் அளித்த புகாரின் பேரில் நாகை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT