முகப்பு
நாகப்பட்டினம்

சட்டைநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 8:51 AM
பகிர்:

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சட்டைநாதர் கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு தெற்குக் கோபுர வாசல் அருகே காசிக்கு அடுத்ததாக அஷ்ட பைரவர்களுக்கு தனி சன்னிதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியையொட்டி, பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக சுக்கரவிநாயகர், சுக்ரலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சிவன்சன்னிதியில் அருள்பாலிக்கும் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.