பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தர பாமக வேண்டுகோள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, பாமக சார்பில் வரும் 11-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, பாமக சார்பில் வரும் 11-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும் என அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரியில் நமக்கு வழங்க வேண்டிய நீரை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்காமல், கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலை கருத்தில்கொண்டு, மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் விளைவிக்கிறது. காவிரி நதிநீர் விவகாரத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தத் தாமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் வரும் 11-ஆம் தேதி பாமக சார்பில் மாபெரும் பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆகையால், அன்றைய தினம் பொதுமக்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் பொது வேலைநிறுத்தத்துக்கு முழு ஆதரவு தந்து வெற்றியடையச் செய்யவேண்டும்.