நாகப்பட்டினம்

கழுமலயம்மன் கோயிலில் தேர்த் திருவிழா

DIN

சீர்காழி கழுமலயம்மன் கோயிலில் பிரமோற்சவத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டைநாதர் தேவஸ்தானத்துக்கு உள்பட்ட கழுமலயம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சாமுண்டீஸ்வரி, வைஸ்ணவி, வராஹி, இந்திராணி, கெளமாரி, பிரம்மஹி, மாகேஸ்வரி ஆகிய ஏழு அம்மன்கள் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் வருடாந்திர 10 நாள் பிரம்மோற்சவம் தற்போது நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று காலை, இரவு என இரு வேளை வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வீதியெங்கும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT