நாகப்பட்டினம்

காஷ்மீரில் சிறுமி படுகொலை: நாகூரில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் பாலியல் வன்முறைக்கு உள்படுத்தி சிறுமி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நாகூரில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி, திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ரியாஸ் பங்கேற்று பேசினார். சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டியும், கண்டனம் தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மெழுகுவர்த்தி ஏந்தி சிறுமியின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர். நவசாத், உதயச்சந்திரன்,  சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT