முகப்பு
நாகப்பட்டினம்

தரங்கை பேராயர் மாணக்கம் லுத்தரன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பொறையாறு தரங்கை பேராயர் மாணக்கம் லுத்தரன் கல்லூரியில் 46-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 7:53 am IST
பகிர்:

பொறையாறு தரங்கை பேராயர் மாணக்கம் லுத்தரன் கல்லூரியில் 46-ஆவது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் எம். ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் நிர்வாகி மற்றும் கல்லூரித் தாளாளருமான கே. வெங்கட்ராமன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று 591 இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். 
விழாவில், கல்லூரி துணை முதல்வர்கள் எஸ். ஜான்சன் ஜெயக்குமார், ஜோயல் எட்வின்ராஜ் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செல்வராஜ், கூட்டுறவுத் துறை துணைப் பேராசிரியர் ராஜாசாலமோன், சபைக்குரு ஜே. காட்வின் இன்பராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.