நாகப்பட்டினம்

கணினி விற்பனைக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு

DIN

நாகை மாவட்டம், மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள கணினி  மற்றும்  உதிரிப் பாகங்கள் விற்பனைக் கடையில் பூட்டை உடைத்து, ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரியவந்தது.
மயிலாடுதுறை பெசன்ட் நகர், அல்லித் தெருவைச் சேர்ந்த சந்திரபோஸ் மகன் ச. பாலமுருகன் (36). ரோட்டரி சங்க உறுப்பினரான இவர், மயிலாடுதுறை சச்சேரி சாலையில் உள்ள லெட்சுமி வணிக வளாகத்தில் கணினி மற்றும் உதிரிப்பாகங்கள் விற்பனைக் கடை நடத்தி வருகிறார்.  
இவர், புதன்கிழமை இரவு, வழக்கம்போல் கடையைப் பூட்டி விட்டு,  வீட்டிற்குச் சென்றார்.  வியாழக்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது,  ரூ.40 ஆயிரம் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
மர்ம நபர் பணத்தை திருடும் காட்சிகள், கடையினுள்பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. 
இதுகுறித்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, கேமராவில் பதிவாகியிருந்த மர்ம  நபரை தேடிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT