முகப்பு
நாகப்பட்டினம்

மங்கைமடம் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

திருவெண்காடு அருகேயுள்ள மங்கைமடத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அறிவிக்கப்பட்ட முற்றுகைப் போரட்டம், காவல் துறையினர் நடத்தியப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கைவிடப்பட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

திருவெண்காடு அருகேயுள்ள மங்கைமடத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அறிவிக்கப்பட்ட முற்றுகைப் போரட்டம், காவல் துறையினர் நடத்தியப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கைவிடப்பட்டது.
மங்கைமடத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையால் அப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுவதால், அந்த கடையை அகற்றவேண்டும் என இளைஞர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இருப்பினும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், டாஸ்மாக் கடையை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இளைஞர் அமைப்பினர் அறிவித்திருந்தனர். 
இதைத்தொடர்ந்து, சீர்காழி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சேகர், இளைஞர் அமைப்பினரை திருவெண்காடு காவல் நிலையத்துக்கு வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், காவல் ஆய்வாளர் வேலுதேவி மற்றும் இளைஞர் அமைப்பு சார்பில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் துரைகோபி, இளைஞர் அமைப்பின் தலைவர் மங்கை வெங்கடேசன், அலுவலர் சங்கத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பேச்சுவார்த்தையில், டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றுவது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததையடுத்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.