நாகப்பட்டினம்

மனுநீதி முகாம்

DIN

நாகை மாவட்டம், குத்தாலம் சரகம், பெருமாள்கோவில் வருவாய் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு வாராந்திர மனுநீதி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், வட்டாட்சியர் சபிதாதேவி கலந்துகொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், வீட்டுமனைப் பட்டா, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து பெற்றுக் கொண்டார். இதில் தகுதியுடைய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முகாமில், வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் தென்னரசு, பாலமுருகன் மற்றும் கிராம உதவியாளர் செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல், பாலையூர் சரகம், ஸ்ரீகண்டபுரம் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற முகாமில், குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் க. முருகேசன், வருவாய் ஆய்வாளர் அனிதா, வருவாய் துணை ஆய்வாளர் பரமானந்தம், கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT