கூத்தாநல்லூரில் குடிநீர் குழாய்த் தொட்டி மூடல்: தினமணி செய்தி எதிரொலி
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்து கிடந்த குடிநீர்க் குழாய்த் தொட்டி, தினமணி செய்தி எதிரொலியாக மூடப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்து கிடந்த குடிநீர்க் குழாய்த் தொட்டி, தினமணி செய்தி எதிரொலியாக மூடப்பட்டது.
கூத்தாநல்லூர் ரேடியோ பார்க், பெரிய கடைத் தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகாமையில் குடிநீர்க் குழாய்த் தொட்டி பல மாதங்களாகத் திறந்து கிடந்தது. இதனால், அந்த வழியாகச் செல்லும் மாணவ, மாணவியர், குழந்தைகள் என பலரும் அதில் விழுந்து காயமடைந்தனர்.
இதுதொடர்பாக தினமணியில் கடந்த மார்ச் 13-ஆம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் அறிவுறுத்தலின்படி, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அந்த குடிநீர்க் குழாய்த் தொட்டியை சரிசெய்து மூடியுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தினமணி நாளிதழையும், நகராட்சியையும் பாராட்டினர்.