நாகப்பட்டினம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

DIN

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. 
வட்டாட்சியர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட திருவிளையாட்டம், காழியப்பநல்லூர், ஆக்கூர், திருக்கடையூர், ஆயப்பாடி, தில்லையாடி,பொறையாறு ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை மனுவாக அளித்தனர். கூட்டத்தில், பொறையாறு, ஆண்டாஞ்சேரி, கோரையாறு பாசன வாய்க்கால் மற்றும் ஒழுகைமங்கலம் பாசன வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களை தூர்வார வேண்டும், விவசாயிகளின் நிகழாண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை இந்த மாத இறுதிக்குள் வழங்க வேண்டும், காவிரி நீர் அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் வந்து சேர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் வட்டாட்சியர் சுந்தரம். கூட்டத்தில், வேளாண் துறை உதவி அலுவலர் உமாபசுபதி, மண்ட துணை வட்டாட்சியர் மகேந்திரன், முதுநிலை ஆய்வாளர் ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT